ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், ஹாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் டைட்டானிக். இப்போது இதே பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகிறது. 'மாயவன்' படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு 'டைட்டானிக்'- 'காதலும் கவுந்து போகும்' என்று பெயர் வைத்திருக்கிறார்.
நாயகனாக கலையரன் நடிக்கிறார். ஏற்கனவே சி. வி. குமார் தயாரிப்பில் அதே கண்கள் என்ற படத்தில் நடித்தார் கலையரசன். அந்தப்படம் கமர்ஷியலாக ஓடவில்லை, ஆனாலும் மீண்டும் கலையரசனை வைத்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
கதாநாயகிகளாக 'கயல்' ஆனந்தியும், அஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். எம்.ஜானகி ராமன் எழுதி இயக்கும் இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.ராம் பிரசாத் கவனிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.