நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
ஸ்டாரபெரி படத்துக்கு பிறகு பாடலாசிரியர் பா.விஜய் அடுத்து நடித்து, இயக்கி வரும் படம் ஆருத்ரா. வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. பா.விஜய்யுடன் தக்ஷிதா, மேகாலீ, சோனி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், ஒய் ஜி மகேந்திரன், மயில்சாமி, அபிசேக், கண்ணன், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குநர் ஏஸ் ஏ சந்திரசேகர், மீரா கிருஷ்ணா, சஞ்சனா சிங், பேபி யுவா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பி எல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசையமைக்கிறார். படம் பற்றி பா.விஜய் கூறியதாவது:
'ஸ்ட்ராபெர்ரி படத்தைத் தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் 'ஆருத்ரா'. இந்த படத்தில் என்னுடைய தந்தையாக வித்தியாசமான தோற்றத்தில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் நடித்திருக்கிறார். நான் சிவமலை என்ற கேரக்டரில் தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக நடித்திருக்கிறேன். 'ஆருத்ரா ' ஒரு எமோஷனல் வித் க்ரைம் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கிறது. இதில் இயக்குநர் கே பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக சுவராசியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். 'ஸ்ட்ராபெர்ரி'யில் எப்படி ஒரு சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ, அதே போல் இந்த 'ஆருத்ரா'விலும் சமூகக்கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியிருக்கிறேன்.
இரண்டு மூன்று சம்பவங்களை பார்த்து, கேட்டு, படித்த பின் தான் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுத தொடங்கினேன். எழுதி முடித்தபின் இந்த திரைப்படத்தை நானே இயக்க திட்டமிட்டேன். சென்னை, பாண்டிசேரி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஹரித்துவார், குலு, மணாலி ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெற்றது. மொத்தம் 85 நாள்கள் படபிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தில் நாற்பது நிமிடத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவிருப்பதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆருத்ரா என்பது ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர். இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் என்று தனியாக எந்த காட்சிகளும் இல்லை. இந்த படம் அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தியை கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதையை பெற்றோர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் வெளியிடுகிறார்கள்.என்றார் பா.விஜய்.