சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
2003-ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ரிலீஸான படம் 'சாமி'. இந்தப் படத்தில், த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ் வில்லனாக நடித்த இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு'சாமி' படத்தின் இரண்டாம் பாகம், 'சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் தயாராகி வருகிறது.
சாமி படத்தின் தொடர்ச்சி என்பதால், முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா, புதிய இணைப்பாக கீர்த்தி சுரேஷ் என இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட, சில நாட்களிலேயே அந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் த்ரிஷா. அவருக்குப் பதிலாக வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யமாலே மற்ற காட்சிகளைப் படமாக்கி வருகிறார் ஹரி.
சமீபத்தில் காரைக்குடியில் அரசியல் கட்சியின் கூட்டம் நடக்கும் காட்சியை படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்தக் கூட்டத்தில், பெருமாள் பிச்சையின் 29வது நினைவு தினம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 'சாமி' படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாசராவின் பெயர் தான் பெருமாள் பிச்சை. அவருடைய மகனாக இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்துள்ளார் பாபி சிம்ஹா.
ஆக, சாமி முதல் பாகத்தின் கதை நடைபெற்று 29 ஆண்டுகள் கழித்து சாமி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை நடைபெறுகிறது. அப்படியானால் சாமி 2 படத்தில் விக்ரம் ஏற்று நடிக்கும் சாமி கேரக்டரின் வயது என்ன?, ஒருவேளை அவர் வயதான கேரக்டரில் நடிக்கிறாரா... இல்லை மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா...? என்பது சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.