நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
ஹரி இயக்கத்தில், விக்ரம் - த்ரிஷா நடித்த படம் சாமி. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் கோட்டா சீனிவாசராவ், பெருமாள் பிள்ளை என்ற வேடத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவரது மிரட்டலான நடிப்பு சாமி படத்திற்கு பலமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது.
விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, வில்லனாக கோட்டா சீனிவாசராவின் மகனாக பாபி சிம்ஹா, ராவண பிச்சை என்ற வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில், பாபி சிம்ஹாவின் வில்லன் வேடம் மிக மிரட்டலாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.