ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. ஒரு காலத்தில் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர், அதன்பின் ஹிந்திக்குச் சென்று அங்கும் சில முக்கியமான படங்களில் நடித்தார். அடிக்கடி ஏதாவது புகைப்படங்களைப் பகிர்ந்து மீடியாக்களில் பரபரப்பாக இருப்பவர். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்திற்கான தகவலில் 'கணவர்' என்ற வார்த்தை இருப்பது தற்போது பரபரப்பாகியுள்ளது.
நீண்ட காலமாகவே வெளிநாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆன்ட்ரூ நீபான் என்பவரை இலியானா காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் இருந்தன. அவர் எடுத்த சில பிகினி புகைப்படங்களைக் கூட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர் இலியானா. சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி அவர் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்தான் இப்போது பரப்பாகி உள்ளன.
“வருடத்தின் என்னுடைய அபிமான நேரம், கிறிஸ்துமஸ் நேரம். மகிழ்ச்சியான விடுமுறை, வீடு, காதல், குடும்பம், போட்டோவை எடுத்தவர் கணவர் ஆன்ட்ரூ நீபான்” என இலியானா அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதுவரை அவருக்குத் திருமணம் நடந்ததைப் பற்றி எதுவுமே சொல்லாத இலியானா இப்படி திடீரென போட்டிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.