ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை பெற்ற பிறகு, முன்பு போல் டூயட் பாடும் வேடங்களில் இல்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
இந்நிலையில், 1967-ம் ஆண்டு சத்யன் போஸ் இயக்கத்தில், பிரதீப் குமார், நர்கீஸ், பெரோஸ் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரில்லர் படமான ராட் அவுர் தின் படத்தை இந்தக்காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு ரீ-மேக் செய்ய உள்ளனர். அறிமுக இயக்குநர் ஒருவர் இப்படத்தை இயக்க உள்ளார். சித்தார்த் ஆனந்த் மற்றும் பிரீர்னா அரோரா தயாரிக்கிறார்கள். ராட் அவுர் தின் ரீ-மேக்கில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் பிரீர்னா அரோரா கூறுகையில், ராட் அவுட் தின் ரீ-மேக் தொடர்பாக சஞ்சய் தத்திடம் பேசி உள்ளேன். அதேப்போன்று ஐஸ்வர்யா ராய்யிடம் பேசி உள்ளேன். ஐஸ்வர்யா நடிப்பதாக உறுதி சொல்லிவில்லை இருப்பினும் அவர் நடிப்பார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.