'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கபாலி படத்தில் ரஜினியின் சென்னை நண்பராக நடித்தவர் விஷ்வந்த். தற்போது அவர் ஓநாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். அட்டக்கத்தி படத்தில் அறிமுகமான விஷ்வந்த் அதன் பிறகு மெட்ராஸ் படத்தில் நடித்தார். வேறு சில படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்தார். ஆனால் கபாலி தான் அவரை அடையாளம் காட்டியது. தற்போது விஷ்வாந்த், ஸ்கெட்ச் படத்தில் விக்ரமின் நண்பராக நடித்து வருகிறார். அதோடு சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.
இது தவிர தற்போது ஓநாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரித்விகா நடிக்கிறார். இதில் அவர் என்ஜினியரிங் மாணவராக நடிக்கிறார். இது திகில் படம். அடுத்து பாலா என்ற புதுமுகம் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவர் பத்திரிகையாளராக நடிக்கிறார். இது சமூக பிரச்சினைகளை பேசும் படம்.