ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாலிவுட் உட்பட இந்திய சினிமாவே வியந்த படம் பாகுபலி 2. இப்படம் முதல்நாளில் ரூ.41 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்தாண்டில் முதல்நாளில் அதிக வசூல் செய்த படம் பாகுபலி-2 தான். இந்நிலையில், சல்மான் கான் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் டியர் ஜிந்தா ஹே.
ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாராகி, 4600 தியேட்டர்களில் வெளியான இப்படம் ஒரு ஆக்ஷ்ன் படமாக வெளிவந்தாலும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இப்படம் முதல்நாளில் ரூ.33.75 கோடி வசூலித்திருக்கிறது. இது பாகுபலி-2 வசூலை விட குறைவு தான் என்றாலும், இந்தாண்டில் அதிகம் வசூலித்த இரண்டாவது படம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.
அதேசமயம், சல்மானின் முந்தைய படங்களான சுல்தான்(ரூ.36.54 கோடி), பிரேம் ரத்தன் தன் பயோ (ரூ.40.35 கோடி), அமீர்கானின், தூம் 3 (ரூ.36.22 கோடி) மற்றும் ஹாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் (ரூ.40.02 கோடி) ஆகியவற்றை முந்தவில்லை என்பது வருத்தமான விஷயம்.