ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமணத்திற்கு பிறகு அக்கா, அம்மா வேடங்களில் நடித்து வருகிறார் மீனா. குறிப்பாக, தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு தமிழில் அடுத்த படியாக படவாய்ப்பு இல்லாமல் மலையாளத்திற்கு சென்ற மீனாவுக்கு மோகன்லாலுடன் திருஷ்யம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே மீண்டும் மோகன்லாலுடன் முந்திரிவள்ளிகள் தளிர்கும்பல் என்ற படத்திலும் நடித்தார்.
அதோடு தெலுங்கிலும் திரிஷ்யம் ரீமேக்கில் வெங்கடேசுடன் நடித்த மீனா, தற்போது பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிறார். அம்மா-மகனுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ்க்கு அம்மாவாக நடிக்கும் மீனாவுக்கு சவாலான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.