ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகைகள்தான் தங்களது ஆபாச போட்டோ, வீடியோக்களை இணைய பக்கத்தில் வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பு கூட்டி வருவார்கள். ஆனால் இப்போது அந்த வியாதி தெலுங்கு நடிகைகளையும் தொற்றிக்கொண்டுள்ளது. ரெஜினா உள்ளிட்ட சில தெலுங்கு நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது அடா ஷர்மா என்ற தெலுங்கு நடிகையும் தனது ஆபாச வீடியோ ஒன்றை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த அடா ஷர்மா, தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் மாமன் வெயிட்டிங் என்ற பாடலில் நடனமாடியிருந்தார். இவர் சமீபத்தில் ஒரு விழாவில் கவர்ச்சி நடனமாடியிருக்கிறார். அப்போது அவரது உடைகள் விலகி ஆபாசம் வெளிப்பட்டிருக்கிறது. ஆனபோதும், அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அடா ஷர்மா. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்று அடா ஷர்மா எதிர்பார்த்த நிலையில், அவரது அந்த வீடியோவை பார்த்த சில ரசிகர்கள் அவரை கண்டபடி விமர்சனம் செய்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.