பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் மில்டன் இயக்கிய, கோலி சோடா சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூலை கொடுத்தது. அதன்பிறகு விஜய் மில்டன் இயக்கி 10 எண்றதுக்குள்ள படம் தோல்வி அடைந்தது. இதனால் விஜய் மில்டன் மீண்டும் தனது பழைய பார்முலாவை கையில் எடுத்தார். கோலி சோடா இரண்டாம் பாகத்தை தொடங்கினார். இதனை அவரது ரப் நோட் நிறுவனத்தின் மூலம் தயரிக்கிறார்.
இப்படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் ஜோஷ், பரத் சீனி, வினோத், ஐசக் பரத், சுபிக்ஷா, க்ரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவணா சுப்பையா மற்றும் ஸ்டண்ட் ஷிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன், ஒரு முக்கிய கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மார்கெட்டில் வேலை செய்யும் முகவரியற்றவர்களின் விளையாட்டு திறமையை முன்னிலைப்படுத்தும் படமான இந்தப் படத்தை திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருக்கிறார் விஜய் மில்டன். படத்திற்காக ஒத்திகையை நீண்ட நாள் நடத்தியதே இதற்கு காரணம்.
இதுகுறித்து விஜய் மில்டன் கூறியதாவது: நாங்கள் திட்டமிட்டபடியே கோலி சோடா 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, சிறப்பாக முடித்துள்ளோம். மிகப்பெரிய ஆதரவும், ஒத்துழைப்பும் தந்த எனது அணியினருக்கும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோலி சோடா மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எனது உழைப்புக்கு மேலும் மதிப்பை கூட்டியுள்ளது. எங்களது உழைப்பும், அர்ப்பணிப்பும் கோலி சோடா போல் கோலி சோடா 2 படத்தையும் சிறப்பாக்கி வெற்றி பெறவைக்கும் என நம்புகிறேன் என்கிறார் விஜய் மில்டன்.