Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பாகுபலி 2, மெர்சல்' படங்களை முந்திய 'விக்ரம் வேதா'

22 டிச, 2017 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Vikram-Vedha-overtakes-Baahubali-2-and-Mersal

தமிழ்த் திரையுலகத்தில் இந்த ஆண்டு 200 படங்கள் வரை வெளியாகும் நிலை உருவாகியுள்ளது. இதில் 95 சதவீதப் படங்கள் வெற்றிப் படங்கள் இல்லை என்றாலும் வெற்றி பெற்ற, வரவேற்பைப் பெற்ற சில படங்கள் மிகவும் வித்தியாசமான படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், தமிழ்த் திரையுலகம் இந்திய அளவில் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரைப்பட இணையதளமான ஐஎம்டிபி இணையதளம் இந்த ஆண்டின் சிறந்த 10 படங்கள் ரசிகர்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்து அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 6 தென்னிந்தியத் திரைப்படங்களும், 4 ஹிந்திப் படங்களும் இடம் பிடித்துள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையமைப்பில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் முதலிடத்தைப் பிடித்து இந்தியத் திரையுலகத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பல கோடி ரூபாய் செலவு செய்து 1700 கோடி ரூபாய் வசூலித்த 'பாகுபலி 2' தெலுங்குப் படம் இரண்டாம் இடத்தையே பிடித்துள்ளது.

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த 'மெர்சல்' படம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் பல ஹிந்திப் படங்களையும் பின்னுக்குத் தள்ளி 'விக்ரம் வேதா' முதலிடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐம்டிபி-யின் சிறந்த 2017ம் ஆண்டு படங்கள்

1. விக்ரம் வேதா (தமிழ்)
2. பாகுபலி 2 (தெலுங்கு)
3. அர்ஜுன் ரெட்டி (தெலுங்கு)
4. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி)
5. ஹிந்தி மீடியம் (ஹிந்தி)
6. தி காஸி அட்டாக் (தெலுங்கு)
7. டாய்லெட் - ஏக் பிரேம் கதா (ஹிந்தி)
8. ஜாலி எல்எல்பி 2 (ஹிந்தி)
9. மெர்சல் (தமிழ்)
10. தி காட் ஃபாதர் (மலையாளம்)

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in