ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பையில் உள்ள கிரெடிட் கார்டுகளில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் பஸ் டிக்கெட் எடுக்க' கையில் பத்து ரூபாய் நோட்டு இல்லாதவனின் நிலை தான் நடிகை த்ரிஷாவுக்கு. இப்போதுள்ள நடிகைகளிலேயே ரொம்ப சீனியர் என்றாலும் இந்த வருடம் அதிக படங்களில் அதாவது சதுரங்க வேட்டை-2, மோகினி, 96, 1818, கர்ஜனை, ஹே ஜூடு என 6 படங்களில் நடித்துவரும் அளவுக்கு பிசியான நடிகையும் த்ரிஷா தான்.
அதேசமயம் இந்த வருடம் அவர் நடித்த ஒரு படம் கூட ரிலீசாகவில்லை என்பது உண்மையிலேயே நகைமுரண் தான். அதுமட்டுமல்ல, அவரது சினிமா பயணத்தில் அவரது படம் வெளியாகாத ஆண்டும் இதுதான்.
த்ரிஷா மலையாளத்தில் முதன்முதலாக நடித்துவரும் 'ஹே ஜூடு' படத்தின் டீசரும் தமிழில் நடித்துவரும் மோகினி படத்தின் டிரைலரும் மட்டுமே கடந்த இரண்டு தினங்களில் வெளியாகி அவருக்கு இந்த வருட கடைசியில் புன்னகையை வரவழைத்துள்ளது.
வரும் 2018 நிச்சயம் த்ரிஷாவின் ஆண்டாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.