'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தானம், சிம்புவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து, சந்தானமும் பதில் வாழ்த்து
தமிழ் சினிமாவில் இன்று முக்கியமான ஒரு நாள் என்று சொன்னால் கூட அது மிகையில்லை. தங்களது சொந்தத் திறமையால், டிவியில் அறிமுகமாகி தங்களுக்கென்று தனி களத்தை உருவாக்கி, அதில் ஜொலித்து பின் சினிமாவுக்கும் நுழைந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன்.
இருவருக்கும் இடையே டிவியில் நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருந்த போதே பகை என ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு திரிகிறது. அது உண்மையோ, பொய்யோ, இருவரும் இதற்கு முன் எந்தக் கட்டத்திலும் அப்படி சொல்லப்பட்ட பகையை வெளிக்காட்டிக் கொண்டதேயில்லை. அவர்களை வைத்து ஆதாயம் தேட நினைக்கும் சிலர் அப்படி ஒரு பகைமையை உருவாக்கியுள்ளார்கள் என்றும் திரையுலகத்தில் ஒரு பேச்சு உண்டு.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் இன்று வெளியாகும் என்று எப்போதோ அறிவிக்கப்பட்டது. திடீரென அந்தப் போட்டியில் தன்னுடைய 'சக்கப் போடு போடு ராஜா' பட வெளியீட்டின் மூலம் நுழைந்தார் சந்தானம். சிவகார்த்திகேயனுக்கு எதிராக சிலர் சந்தானத்தை கொம்பு சீவி விட்டதால்தான் அவரும் வேண்டுமென்றே போட்டியில் குதித்துள்ளார் என்று கோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் எதுவும் காட்டிக் கொள்ளாமல் சிவகார்த்திகேயன், இன்று தன்னுடன் போட்டிக்கு வரும் சந்தானத்திற்கு பெருந்தன்மையாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், “எஸ்டிஆர்க்கு, சந்தானம் அண்ணா மற்றும் குழுவினருக்கு 'சக்கப் போடு போடு ராஜா' வெளியீட்டிற்கு என்னுடைய வாழ்த்துகள்,” என அவர் தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு சந்தானமும் நன்றி தெரிவித்திருக்கிறார். "நன்றி சிவா, உங்கள் வேலைக்காரன் பட வெற்றிக்கு பிரார்த்தனை செய்கிறேன். மோகன்ராஜா அண்ணா உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என டுவீட் செய்துள்ளார்.
'சக்கப் போடு போடு ராஜா' படம் மூலம் சிம்பு என்கிற எஸ்டிஆர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.