ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது ஒரு டஜன் படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டு, நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இந்தப் பட்டியலில் இன்னொரு படமும் சேரவிருக்கிறது. நெப்போலியன், அகானா நடிக்க பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'சீவலப்பேரி பாண்டி'. வார இதுழில் வெளியான ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்போது வெற்றியடைந்தது.
புதுநெல்லு புதுநாத்து படத்தில் வில்லனாக அறிமுகமான நெப்போலியன் தொடர்ந்து வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். நெப்போலியனுக்கு ஹீரோவாக நடித்த முதல் படம் சீவலப்பேரி பாண்டி. இந்தப்படத்தின் வெற்றி நெப்போலியனின் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது. பி.ஜி.ஸ்ரீகாந்த் தயாரித்த இப்படத்திற்கு அண்மையில் மறைந்த ஆதித்யன் இசையமைத்திருந்தார். கிழக்கு செவக்கையில என்ற பாடல் ஹிட் பாடலாக அமைந்தது.
'சீவலப்பேரி பாண்டி'யின் கதையை தற்போதைய காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் சிறிது மாற்றம் செய்து ரீமேக் செய்யவிருக்கிறார் பி.ஜி.ஸ்ரீகாந்த். இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? சீவலப்பேரி பாண்டி படத்தில் ஆதித்யனிடம் கீபோர்டு பிளேயராகப் பணியாற்றியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
நெப்போலியன் நடித்த வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சம்பளம், கால்ஷீட் போன்ற பிரச்னைகளால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.