தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மதுர படத்தை இயக்கிய ஆர்.மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் படம் 'மோகினி'. இந்தப் படத்தை முதலில் ஞானவேல்ராஜா தயாரிப்பதாக இருந்தது. லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்பட்டநிலையில் மோகினி படத்தை ட்ராப் பண்ணும் சூழல் ஒருவானது. அதன்பிறகு, 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் மோகினி படத்தை அண்டர்டேக் பண்ணி தயாரித்தது. சூர்யா நடித்த 'சிங்கம்-2' படத்தை தயாரித்த நிறுவனம் இது.
மோகினி படத்தின் படப்பிடிப்பு. போஸ்ட் புரொடக்ஷன் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டநிலையில் ரிலீஸ்க்கான முயற்சியில் இறங்கி உள்ளனர். பொங்கலுக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் உட்பட சில படங்கள் ரிலீஸாகின்றன. இதில், தானா சேர்ந்த கூட்டம் வெளியாகும் அதே ஜனவரி மாதம் 12-ஆம் தேதி மோகினி படத்தை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.