'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதியே வெளியாகவிருக்கிறது. இந்த படம் தவிர கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா இணைந்து நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படமும் பொங்கல் வெளியீடுதான்.
அடுத்து விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் சமுத்திரக்கனி நடித்துள்ள 'மதுரவீரன்' படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. விமல் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள 'மன்னர் வகையறா' திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.
பொங்கல் வெளியீட்டு படங்கள் வரிசையில் இப்போது சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படமும் இணைந்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஜன்னல் ஓரம் படத்தில் விமல் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளரான சுந்தரி பிலிம்ஸ் முருகனுக்கும் விமலுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளது. இதே முருகன் தான், இப்போது தன் மனைவி பெயரில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை தயாரித்து வருகிறார். தற்போது விமல் அந்த பணத்தை கேட்டு முருகனிடம் பஞ்சாயத்து பண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.