'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான, 'டிடி' என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, தன் கணவர் ஸ்ரீகாந்திடமிருந்து விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, மனுதாக்கல் செய்து உள்ளனர்.இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.இந்
நிலையில், விவாகரத்துக்கு காரணம், டிடி சினிமாவில் நடிப்பது, அவரது கணவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் ஏற்பட்ட விரிசலே, நாளடைவில் வளர்ந்து, விவாகரத்து வரை சென்று உள்ளது. அத்துடன், 'சுசீலீக்ஸ்' விவகாரமும், புகைச்சலை அதிகப்படுத்தி உள்ளது என்கின்றனர்.