பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதுமுகமாக அறிமுகமான போதும், இயல்பான நடிகை என, எல்லாரையும் பேச வைத்து, ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர், அஞ்சலி. சித்தியுடன் சண்டை, காதல், மோதல் என, பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், செய்திகளிலும் இடம் பிடித்தார். எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீண்டு, சினிமாவில் மீண்டும் பிசியாக வலம் வரும் அஞ்சலி, பலுான் பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பலுான் படத்தில் உங்கள் ரோல்?
பலுான், என் திரையுலக பயணத்தில் கொஞ்சம் வித்தியாசமான படம். யாரும் யூகிக்க முடியாத கதை. இதுவரை நான் ஏற்காத கேரக்டர். எல்லா பிரச்னைகளையும் எளிதாக கையாளும் பெண்ணாக நடிக்கிறேன்.
ஜெய்யுடன் மீண்டும் நடித்த அனுபவம்?
எங்கேயும் எப்போதும் படம் வெளிவந்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஜெய்யுடன் நடித்து உள்ளேன். நல்ல கதை அமைந்தால் மட்டுமே, மீண்டும் சேர்ந்து நடிப்பது என, ஏற்கனவே இருவரும் முடிவு எடுத்திருந்தோம். இந்த கதை, எங்களுக்கு அப்படி அமைந்தது.
ஹோம்லியான அஞ்சலி, இப்ப கிளாமருக்கு மாறிட்டாங்க போலிருக்கிறதே?
என்னை ஒரே மாதிரி பார்க்க, ரசிகர்களுக்கு கொஞ்சம் போரடிக்கும். மாற்றம் தேவை என, நினைத்தேன். அதுமட்டும் அல்ல, அடுத்து நான் நடிக்க வேண்டிய படத்துக்காக, எடையை குறைக்க வேண்டி உள்ளது. இதற்காக, தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இப்போது, 4 கிலோ எடை குறைந்து விட்டேன். அதனால், உங்களுக்கு மாற்றம் தெரிந்திருக்கலாம்.
அஞ்சலி படங்களில் சிறப்பான நடிப்பு என, எந்த படத்தை சொல்லலாம் ?
அங்காடித் தெருவைத் தான், சொல்ல முடியும். தமிழில், எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்றால், கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் ஆகியவற்றை சொல்லலாம்.
சினிமாவில், 10 ஆண்டுகளாக இருக்கீங்க; இதுவரையிலான பணி, உங்களுக்கு திருப்தி அளித்துள்ளதா?
முடிந்தவரை என் வேலையை சிறப்பாக செய்துள்ளதாகவே நினைக்கிறேன். ஆனாலும், நான் நடித்த சில காட்சிகளை இப்போது பார்க்கும்போது, இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாமே என, நினைப்பது உண்டு.
உங்களுக்கு பிடித்த நடிகை?
எப்போதுமே, ஸ்ரீதேவி மேடம் தான் எனக்கு பிடிக்கும். அவங்க நடித்த படங்கள் என்றால், நேரம் போவதே தெரியாமல் பார்த்து ரசிப்பேன்.
இப்ப எந்த ஊரில் இருக்கீங்க?
ஐதராபாத், சென்னை என, இரண்டு ஊர்களிலும் மாறி மாறி வசிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இரண்டு ஊர்களுமே எனக்கு பழக்கப்பட்டவை தான். எங்கே வேலை இருக்கோ, அங்கே இருப்பேன்.
ஜெய்யிடம் உங்களுக்கு பிடித்தது?
அவர், ரொம்பவே ஜாலி டைப். எல்லாரிடமும் நன்றாக பேசி பழகுவார். எவ்வளவு சிரமம் இருந்தாலும், மற்றவர்களை சிரிக்க வைத்து விடுவார். பழகுவதற்கு இனிமையான மனிதர். எல்லா விஷயங்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை?
சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு போவதற்குள், மணிரத்னம் சாரின் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.
புத்தாண்டு எப்படி இருக்கும்?
ஜனவரி துவக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். தமிழ், தெலுங்கு என, ஐந்து படங்கள் இப்போது கைவசம் உள்ளன. புத்தாண்டு, சிறப்பாக அமையும் என, நினைக்கிறன்.