ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்துக்கு பின், நடிக்க மாட்டார்; குடும்பம், குட்டி என, செட்டிலாகி விடுவார் என, நினைத்துக் கொண்டிருந்த, தன் போட்டியாளர்களின் கனவுகளை, தவிடு பொடியாக்கியுள்ளார், சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் முடித்த கையுடன், வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று திரும்பிய சமந்தா, முழுவீச்சில் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ரங்காஸ்தலம், மாகாநடி ஆகிய தெலுங்கு படங்களிலும், இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ் படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அதிலும், இந்த எல்லா படங்களிலுமே, ஹீரோவுடன் டூயட் பாடிவிட்டு, கிளைமாக்சில், குரூப் போட்டோவுக்கு, போஸ் கொடுக்கும் கேரக்டர்கள் இல்லையாம் அவருக்கு. அனைத்து படங்களிலுமே, அவருக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டராம். சமந்தாவுக்கு இது நல்ல செய்தி தான் என்றாலும், அவரை போட்டியாக நினைக்கும் நடிகையருக்கு, இது சோகமான செய்தி தான்.