'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகிறது. பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் பொலிட்டிக்கல் திரில்லர் கதையில் தயாராகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே ஹிட்டடித்து படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த தானா சேர்ந்த கூட்டம் இந்தியில் அக்சய்குமார் - காஜல்அகர்வால் நடித்த ஸ்பெஷல் 26 என்ற படத்தின் ரீமேக் என்று பரவலாக பேசப்படுகிறது. என்றாலும், தமிழுக்கு அப்படியே படமாக்காமல் தனது பாணிக்கு மாற்றி படமாக்கியிருக்கிறார் விக்னேஷ்சிவன்.
அதேபோல், இந்த ஸ்பெசல் 26 படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய ரவிதேஜாவும் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் இப்போது தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கிலும் கேங் என்ற பெயரில் வெளியாகயிருப்பதால், ஸ்பெஷல் 26 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் திட்டத்தை கைவிட்டு விட்டார் ரவிதேஜா.