அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
இந்தியத் திரையிசையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் விருதுகளையும் அள்ளி வந்தவர். சென்னையின் பெருமை மிக்க மனிதர்களில் ஒருவராக இருக்கும் ரகுமான் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தற்போது ஹிந்தியில் 'தி பகிர் ஆப் வெனிஸ், பியான்ட் தி கிளவுட்ஸ், 99 சாங்ஸ்', ஆங்கிலத்தில் 'லி மியூசிக்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்தியாவில் தற்போது அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் '2.0' படத்திற்கும் அவர் இசையமைத்து வருகிறார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திற்கு இசையமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணைய உள்ள படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசை என்கிறார்கள். ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான்தான் இசை.
இந்தப் படங்களை அடுத்து மேலும் சில பிரம்மாண்டமான படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மலையாளத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'ரன்டமூழம்' படத்திற்கும், தமிழில் 500 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'சங்கமித்ரா' படத்திற்கும் ரகுமான் இசையமைக்க உள்ளார். தெலுங்கிலும் 'சை-ரா' படத்திற்கும் ஒப்பந்தம் ஆனவர், திடீரென அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார். இல்லை என்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகளில் பிரம்மாண்ட சரித்திரப் படங்களுக்கு இசையமைக்கும் பெருமை அவருக்குக் கிடைத்திருக்கும். அந்தப் படத்திலிருந்து ரகுமான் விலகியது, சிரஞ்சீவி ரசிகர்களுக்கு மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு ஹிந்தி, தமிழ், மலையாளம் என ரகுமான் நிறையவே பிஸியாக உள்ளார்.