ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடித்தது சில படங்கள் தான் என்றாலும் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட மலையாள நடிகை நஸ்ரியாவுக்கு இன்று பிறந்தநாள். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டபின் சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நஸ்ரியா, தற்போது அஞ்சலி மேனன் டைரக்சனில் பிருத்விராஜ், பார்வதி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதில் பிருத்விராஜின் தங்கையாக நடித்து வருகிறார் நஸ்ரியா. இன்று நஸ்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ள பிருத்விராஜ், நஸ்ரியாவை தனது பாசமான குட்டித்தங்கை என குறிப்பிட்டுள்ளார்..
மேலும், தங்கள் வீட்டில் இருவருமே ஆண் பிள்ளைகளாக பிறந்துவிட்டதால், ஒரு தங்கை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பலநாள் நினைத்து ஏங்கினாராம் பிருத்விராஜ். அப்படிப்பட்ட ஒரு தங்கையாக தனக்கு நஸ்ரியா கிடைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.