Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருவி இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் சவால்

20 டிச, 2017 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnan-challenge-Aruvi-Director

சமீபத்தில் வெளிவந்து அதிக வரவேற்பை பெற்றிருக்கும் படம் அருவி. இந்தப் படத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் சாயலில் சொல்வதெல்லாம் சத்தியம் என்ற நிகழ்ச்சி காட்டப்படுகிறது. அந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்பு கருத்து தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

"இந்தப் படத்தில் என்னை கிண்டல் செய்வது பற்றி எனக்கு முன்பே தெரியும். தணிக்கை குழுவில் பார்த்தவர்கள் சொன்னார்கள். அதோடு நல்ல கருத்துள்ள படம் அதனால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் சொன்னார்கள். என்னை கிண்டல் செய்தாலும் அருவி நல்ல படம்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென அருவி படம் பற்றி கோபமாக விமர்சித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், "என்னுடன் கேமரா முன்னால் நேரடியா விவாதிக்கத் தயாரா?" என்று அருவி இயக்குனருக்கு சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

அநீதிக்கு ஆளான பெண்களுக்கு உதவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அருவி படத்தின் இயக்குனர் கேலி செய்துள்ளர். ஒரு பெண்ணை மையமாக வைத்து படம் எடுக்கும்போது இன்னொரு பெண்ணை அதில் தவறாக சித்தரிப்பது மோசமான செயல். உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு மதிப்பளிக்காதவர்கள் மத உணர்வுகளுக்கு எப்படி மதிப்பளிப்பார்கள். இயக்குனருக்கு தைரியம் இருந்தால் கேமராவுக்கு முன்னால் அமர்ந்து என்னை நேருக்கு நேர் சந்தித்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும் என்று எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in