ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
திரையுலகத்தில் ரசிகர்களின் பாராட்டு, வரவேற்பை விட ரஜினிகாந்தின் வரவேற்பையும், பாராட்டையும் பெரிதாக நினைப்பார்கள். அதிலும் புதுமுகங்களின் படம் என்றால் கேட்கவா வேண்டும். அப்படி ஒரு பாராட்டை 'அருவி' படத்திற்காக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
'அருவி' படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்தின் பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இங்கும், அங்கும், எங்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி,” என்று மகிழ்ந்துள்ளார். இயக்குனர் அருண் பிரபு, “உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு.ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து, மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி,” என பேரானந்தம் அடைந்துள்ளார். படத்தின் நாயகி அதிதி பாலன், ”ரஜினிகாந்த் அருவி படக்குழுவினரைப் பாராட்டியதன் உற்சாகம் தாங்கவில்லை,” என ஆனந்தப்பட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் மட்டுமல்ல திரையுலகத்தைச் சார்ந்த பலரும் 'அருவி' படத்தைப் பாராட்டி வருகிறார்கள். அதே சமயம், சமூக வலைத்தளங்களில் படம் பற்றி பலமான கருத்துப் பரிமாற்றங்களும் நடந்து வருகிறது. திருநங்கைக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்தாலும் அவர்களை கேவலப்படுத்தும் விதத்தில் சில ஆபாசமான வசனங்கள் படத்தில் உள்ளன. தேவையே இல்லாமல் டிவி நிகழ்ச்சியை வெகுவாகக் கிண்டலடித்திருக்கிறார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு, 'அருவி' படம் 'அஸ்மா' என்ற எகிப்திய படத்தைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.