இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள 'வேலைக்காரன்' வருகிற 22-ஆம் தேதி வெளியாகிறது. 'வேலைக்காரன்' ரிலீசாவதற்கு முன்பே பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
தென்காசியை சுற்றி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறக்குறைய 70 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17-ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு 'சீமத்துரை' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை பொன்ராம் மறுத்துள்ளார். படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை, விரைவில் அறிவிப்போம். படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் கதையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சீமத்துரை என்ற பெயரில் ஏற்கனவே நடிகை விஜி சந்திரசேகர் முதன்மை ரோலில் நடிக்க ஒரு படம் தயாராகி வருகிறது. சந்தோஷ் தியாகராஜன் என்பவர் இயக்கி உள்ளார்.