பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
“தம்பி வெட்டோத்தி சுந்தரம், சௌகார்பேட்டை”, விரைவில் வெளிவர உள்ள 'பொட்டு' ஆகிய படங்களை இயக்கியுள்ள வடிவுடையான் அடுத்து சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க உள்ள ஒரு சரித்திரத் தமிழ்ப் படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் 'ஏகன்' படத்தில் நடித்த நவ்தீப் வில்லனாக நடிக்க உள்ளார். நாயகனாக நடிக்கும் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சன்னி லியோனுக்கு 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 'பாகுபலி 2' படத்தில் அனுஷ்கா சம்பளம் வாங்கியதை விடவும் அதிகம் என்கிறார்கள். அனுஷ்காவுக்கு 'பாகுபலி 2' படத்தில் நடிக்க 3 கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் கொடுத்தார்களாம்.
அதே சமயம், தமிழில் நயன்தாராவின் சம்பளத்தை சன்னி லியோனால் முறியடிக்க முடியாமல் போனதுதான் ஆச்சரியம். நயன்தாராவின் தற்போதைய சம்பளம் சுமார் 4 கோடி ரூபாய் என்கிறார்கள்.
நயன்தாராவை விடவும் இந்திய அளவில் மிகவும் பாப்புலர் ஆக இருக்கும் சன்னி லியோன் சம்பள விஷயத்தில் நயன்தாராவை நெருங்க முடியாதது ஆச்சரியம் தான்.