இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளவர் அனிருத். கடந்த சில வருடங்களாகவே அவரை தெலுங்கில் அறிமுகப்படுத்த சில முயற்சிகள் நடந்தன. ஆனால், கடைசியில் அவை நடைபெறாமலேயே போய்விட்டன. ஆனால், இப்படி ஒரு அறிமுகத்திற்காகத்தான் அவை நடைபெறாமல் போயிருக்கலாமோ என்று யோசிக்க வைக்கிறது.
தெலுங்குத் திரையுலகின் பவர்புல் ஹீரோவான பவன் கல்யாண் படத்தில் அறிமுகமாவது, தமிழில் விஜய் படத்தில் அறிமுகமாவதை விடப் பெரிய விஷயம். த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் மற்றும் பலர் நடிக்கும் 'அஞ்ஞாதவாசி' படத்தின் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார் அனிருத்.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று மாலை ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்களாம். அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்களும், டீசரும் மிகப் பிரமாதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவிலும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.
இன்று நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பவன் கல்யாண் ரசிகர்கள் கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம். ஆனால், படக்குழுவினர் ரசிகர்களுக்கு அதிகமான அளவில் அனுமதியளிக்கவில்லை எனத் தெரிகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக யு டியூப், பேஸ்புக் ஆகிய தளங்களில் இசை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்களாம்.
'அஞ்ஞாதவாசி' படம் யாருக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுக்கப் போகிறதோ, இல்லையோ, அனிருத்திற்கு ஒரு அமர்க்களமான அறிமுகத்தையும், அடையாளத்தையும் கொடுக்கப் போகிறது. தமன், தேவிஸ்ரீபிரசாத், அனுப் ரூபன்ஸ், ஆகிய தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இனி கடும் சவால் காத்திருக்கிறது.