'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்ரீதேவி நடித்து சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாம். அவரது கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். மகளின் வாழ்க்கையை சீரழித்த வில்லன்களை ஒரு தாய் தேடிப்பிடித்து பழிவாங்குகிற கதை. இந்தி மற்றும் தமிழ் மொழியில் தயாராகியிருந்தது.
தற்போது இந்தப் படம் மாஸ்கோவில் நடந்து வரும் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீதேவியும், அவரது கணவர் போனி கபூரும் மாஸ்கோ சென்றனர்.
மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஸ்ரீதேவியை வரவேற்றனர். அதிகமாக இந்திய படங்கள் வெளியாகாத ரஷ்யாவில் தனக்கிருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்து வியந்து போனார் ஸ்ரீதேவி. மாம் படத்தை ரஷ்யாவில் திரையிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.