தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
பாகுபலி-2 படத்தை இயக்கி இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராகியிருப்பவர் ராஜமவுலி. அவர் அடுத்து என்ன படம் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அடுத்தபடியாக அவர் இயக்கும் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கயிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அந்த படம் 2018ம் ஆண்டில் தொடங்கயிருக்கிறது.
இந்தநிலையில், தன்னை அதிகம் கவர்ந்த படம் குறித்து ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், மெல் கிப்சன் இயக்கி நடித்த, பிரேவ் ஹார்ட் என்ற ஹாலிவுட் படம் தான் இதுவரை நான் பார்த்ததில் என்னை வெகுவாக கவர்ந்த படம். இந்த படம் என் மனதில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறியுள்ள ராஜமவுலி, ஒவ்வொரு காட்சிகளும், செயலும் முன்மாதிரியாக இருந்தன. அதன்காரணமாக இந்த படத்தை நான் பலமுறை பார்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.