‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மெர்சல் படத்திற்கு பிறகு ரஜினியின் 2.O, சர்வம் தாளம் மயம், இந்தியன்-2 மற்றும் இந்தி, மலையாளத்திலும் பல படங்களுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். அதோடு, உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவ்வப்போது பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் அவர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் என்கோர் என்ற இசை நிகழ்ச்சியை எம்.டிவியுடன் இணைந்து வழங்கினார் அவர். ஐதராபாத்திலுள்ள கச்சிபோலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியை 3 மணி நேரம் நடத்தினார். அதையடுத்து வருகிற டிசம்பர் 23-ந்தேதி புதுடில்லியிலும் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆந்திர அரசு சார்பில் காக்கி நாடாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியிலும் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். அதற்கான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெற்று வருகிறது.