ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'. அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இரண்டாவது படம் இது.
அதர்வா ஜோடியாக தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல நாயகி ராஷி கண்ணா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நயன்தாரா படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனுராக் காஷ்யப் தான் இப்படத்தின் வில்லன். நல்ல தமிழ்ப் படங்கள் மீது தனி காதலுடன் இருக்கும் அனுராக்கின் நடிப்பு இப்படம் மூலம் அதிகம் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது. விரைவில் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.