'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் பல காப்பி படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களைத்தான் அதிகம் காப்பியடித்துக் கொண்டிருந்தார்கள். சமீப காலமாக தமிழில் இதற்கு முன்பு வந்த சில படங்களையே காப்பியடித்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'பலூன்' படத்தை ஹாலிவுட் படங்களிலிருந்துதான் காப்பியடித்து எடுத்தேன் என அப்படத்தின் இயக்குனர் சினிஷ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அது பற்றி சினிஷ் பேசியதாவது,
“ஒரு முறை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவைப் பார்த்த போது, ஒரு ஹாரர் படம் பண்ணலாமான்னு கேட்டாரு. அப்படி ஒரு படம் பண்ண எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. இருந்தாலும் ஒரு தயாரிப்பாளர் கேட்டு பண்ணலன்னா நல்லா இருக்காதேன்னு வீட்டுக்குப் போய் யோசிச்சேன். அப்புறம் ஒரு 30, 40 இங்கிலீஷ் படம் பார்த்தேன். அப்புறம், கடகடன்னு உருவி 20 நாள்ல கதை எழுதினதுதான் 'பலூன்' படம்.
இதை ஏன் சொல்றேன்னா, இப்ப நாம எதை ரெபரென்ஸ் எடுத்து பண்ணாலுமே, ஆடியன்ஸ் ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க, அவங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க. 'மௌன ராகம்' மாதிரி ஒரு படம் எடுத்துட்டு, நான் 'மௌன ராகம்' படத்தையே பார்க்கலை அப்படின்னுலாம் சொல்லி மாட்டிக்க விரும்பலை. 'பலூன்' படத்தோட டைட்டில் கார்டுலயே நான் எந்தப் படத்துல இருந்து கதையை காப்பி அடிச்சேன்னு நன்றி கார்டு போட்டுடுவேன்,” எனக் கூறினார்.
'மௌன ராகம்' படத்தை காப்பியடித்துதான் 'ராஜா ராணி' என்று படமாக்கினார் இயக்குனர் அட்லீ. அவரைத்தான் மறைமுகமாக இயக்குனர் சினீஷ் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். 'ராஜா ராணி' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்த ஜெய் தான், 'பலூன்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.