தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய அளவில், மட்டுமல்லாது உலக அளவில் யு டியூபில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை விஜய் நடித்த 'மெர்சல்' டீசர் பெற்றது. அந்த சாதனையை அடுத்து வெளிவந்த சில டீசர்கள் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக நேற்று முன்தினம் வெளிவந்த பவன் கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி' பட டீசர் முறியடிக்கும் என தெலுங்குத் திரையுலகத்தினரும், பவன் கல்யாண் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், 'அஞ்ஞாதவாசி' டீசரால் 'மெர்சல்' சாதனையை முறியடிக்க முடியவில்லை. இருந்தாலும் தெலுங்குத் திரையுலகத்தில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகளை என சாதனையைப் புரிந்துள்ளது.
'அஞ்ஞாதவாசி' டீசர் சனிக் கிழமை மாலை 6.30 மணியளவில் யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே 40 லட்சம் பார்வைகளையும், 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றது. தற்போது 78 லட்சம் பார்வைகளையும், 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'கேங்' தெலுங்கு படங்களில் அதிக லைக்கான 3 லட்சம் லைக்குகளைத் தாண்டி சாதனை புரிந்தது. அந்த சாதனையை அன்றே 'அஞ்ஞாதவாசி' டீசர் முறியடித்துவிட்டது.
'மெர்சல்' டீசர் தொடர்ந்து அதிக லைக்குகளுடன் உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறது.