மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சமீபத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் படம் அருவி. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார், அதிதி பாலன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனமும் செய்தது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து மலையாள நடிகை லட்சுமி கோபாலசாமி நடித்திருந்தார். இந்தப் படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன். எனது நிகழ்ச்சியையும், என்னையும் கிண்டல் செய்தாலும் அருவி நல்ல படம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்தப் படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிர்வினை கூற வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார். பெண்ணியப் படம் எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார்.