பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சாகர் புரொடக்ஷ்ன் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் படம் ஈடிலி, இதில் லிம்மல் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். அட்டு படத்தில் நடித்த ரிஷி இதில் வில்லனாக நடிக்கிறார். இவர்கள் தவிர லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா என இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். யுவன் முத்தையா என்ற புதுமுகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:
ஈடிலி என்ற சொல் ஈசனை குறிக்கும், ஈடு இணை இல்லாதவன் என்ற பொருள் கொண்டது. இது ஒரே இரவில் நடக்கும் கதை. மாலை 6 மணிக்கு தொடங்கும் கதை மறுநாள் காலை 6 மணிக்கு முடியும், கள்ளச்சந்தை புழங்கும் கதை களம். நாளை நாம் யாரை சந்திப்போம், யாரால் நமக்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. இந்த நிலையில் அண்டர்கிரவுண்டில் நடக்கும் ஒரு விஷயத்தில் மாட்டிக் கொள்ளும் ஒருவனின் கதை இது. இந்த கதையின் வழியாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் பேசப்படுகிறது. நல்ல களம், கெட்ட களம் என்ற இரு களத்தில் கதை பயணிப்பதால் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். என்றார் இயக்குனர் யுவன் முத்தையா.