பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நாகார்ஜூனா, அமலா தம்பதிகளின் மகனான அகில், ஆந்திராவில் வளர்ந்து வரும் நடிகர். மகனுக்காக நாகார்ஜூனா தயாரித்து வரும் படம் ஹலோ. நாகார்ஜூனா குடும்பத்தினரை வைத்து மனம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார். அனூப் ரூபன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் திருமண பாடல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு ஆந்திராவை கலக்கி வருகிறது.
அகில், பேஷன் டிசைனர் ஸ்ரேயாவை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சமந்தா, நாக சைதன்யா திருமணத்திற்கு முன்பாக இவர்கள் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் நின்று விட்டது. இந்த நிலையில் வெளியாகி உள்ள அகிலின் திருமண பாடல் செம ஹிட்டாகியுள்ளது.
இந்த பாடல் காட்சியில் கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா கிருஷ்ணன், ஜகபதிபாபு ஆகியோர் இணைந்து ஆடியிருக்கிறார்கள். கலை இயக்குனர் ராஜீவன் நம்பியார் கைவண்ணத்தில் 2 கோடி செலவில் மிக ஆடம்பரமாக, பளபளப்பான அரங்கத்தை இரண்டு வாரங்களாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் ஆடை வண்ணங்களுக்கு ஏற்ப, அரங்கத்தின் வண்ணங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ராஜீவன். பாடல் ஹிட்டாகி இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.