‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், கடைசியாக தேரா இந்திஜீர் என்ற படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து கடை திறப்பு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து வருகிறார்.
இந்நிலையில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான மேன் வெஸ்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்ப அவருக்கு கிடைத்துள்ளது. டிஸ்கவரி டிவி சேனல் இந்தியில் நடத்தும் இந்த நிகழ்ச்சியை சன்னி லியோன் தொகுத்து வழங்க உள்ளார். டிஸ்கவரி ஜீத் சேனலில் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளதாம்.
இது பற்றி சன்னி லியோன் கூறுகையில், டிஸ்கவரி ஜீத் சேனலில் பிரபல டிவி நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது என்னை பிரபலப்படுத்திக் கொள்ள இன்னும் உதவிகரமாக இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திறாத ரசிகர்களிடம் என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம் இந்த நிகழ்ச்சியை பார்த்திராதவர்களும் இதனை பார்க்க வைக்க முடியும் என்றார்.