Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜன.,5,6 ல் படப்பிடிப்புக்கள் ரத்து : நடிகர் சங்கம் அறிவிப்பு

16 டிச, 2017 - 12:27 IST
எழுத்தின் அளவு:
shooting-canceled-on-jan-5-and-6-th

ஜனவரி 6 ம் தேதி மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலைவிழா நடக்க உள்ளது. தொடர்ந்து கபடி உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகளும் நடிகர் சங்கம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் படப்பிடிப்புக்கள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் இன்று (டிச.,16) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான நட்சத்திர விழா 2018 வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.



மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது.இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in