நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், சமீபகாலமாக தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்க வரும் அவர், சென்னை, ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் மேடைகளில் தோன்றி கவர்ச்சி நடனமும் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், வருகிற 2018 ஜனவரி 1-ந்தேதி அன்று கர்நாடகாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் நள்ளிரவு பார்ட்டியில் சன்னி லியோனும் கலந்து கொள்கிறார். அதோடு, சினிமாவை மிஞ்சும் வகையில், படுகவர்ச்சியான நடனமும் ஆடுகிறாராம். அதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் போட்டா போட்டியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
ஆனால் இந்த சேதி வெளியில் பரவியதை அடுத்து கர்நாடகாவில் உள்ள ஒரு அமைப்பு, சன்னிலியோனின் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளது. அதோடு, கர்நாடக பெண்களின் கலாச்சாரம் தெரியாத சன்னிலியோனை கர்நாடகாவிற்குள் கவர்ச்சி நடனமாட அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்த கன்னட அமைப்பு கொடி பிடித்துள்ளது.