மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரேமம் சாய் பல்லவி தெலுங்கில் நடித்த படம் பிடா. அந்த படமும் வெற்றி பெற்று தெலுங்கில் அவருக்கு நல்லதொரு ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுத்தது. அதையடுத்து நானிக்கு ஜோடியாக எம்சிஏ என்ற படத்தில் நடித்துள்ளார் சாய்பல்லவி. எம்சிஏ என்றால் மிடில் கிளாஸ் அப்பாயி என்று பொருள். இந்த படம் டிசம்பர் 21-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இந்த படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும், பிரேமம், பிடா படங்களைப்போன்று இந்த படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. அதாவது, இந்த படத்தில் சமூக விரோத கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் நானியை அவர்களின் பிடியில் இருந்து வெளியில் கொண்டு வரும் வேடத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். அதனால் பிடா படத்தை விடவும் தெலுங்கில் தனக்கு பெரிய இடத்தை இந்த படம் பிடித்துக் கொடுக்கும் என்று தனது எதிர்பார்ப்பினை கூறி வருகிறார் சாய்பல்லவி.