இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'ஹர ஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படத்தை தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அடுத்து 'கஜினிகாந்த்' என்ற படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தையும் 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்தில் ஆர்யாக்கு ஜோடியாக வனமகன் சாயிஷா நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ரஜினிகாந்த் தோன்றிய ஒரு கெட்-அப்பில் ஆர்யா இருப்பது மாதிரி 'கஜினிகாந்த்' ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்ததோடு, அதை ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று வெளியிட்டனர்!
கஜினிகாந்த் என்ற படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்யா தோன்றும் கெட்டப்பும், இது ரஜினியை கிண்டல் பண்ணும் படம் என்ற கருத்தை ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 'கஜினிகாந்த்' ஒரு தெலுங்குப்படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை படக்குழு ரகசியமாக வைத்திருக்கிறார்களாம்.