Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன்...!

19 பிப், 2012 - 09:34 IST
எழுத்தின் அளவு:

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். பல வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் சுந்தர்.சி, திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார். அதில் கொஞ்ச காலம் தாக்குபிடித்த அவர், இப்போது மீண்டும் டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார். தற்போது விமல், சிவா, அஞ்சலி ஆகியோரை வைத்து "மசாலா காபி" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஷாலை வைத்து ஒரு முழுநீள கமர்ஷியல் படத்தை எடுக்க இருக்கிறார். படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம். விஷால் முதன்முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சுந்தர்.சி ‌கூறுகையில், இந்தபடத்திற்கு ஒரு ஹீரோயின் மட்டுமே தேர்வு செய்துள்ளோம். ஆனால் படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம், அதனால் இன்னொரு ஹீரோயினுக்காக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றார்.

இதனிடையே இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சுந்தர்.சி இயக்க திட்டமிட்டு இருப்பதாலும், ஸ்ருதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிரபலம் என்பதால் அவரை இந்தபடத்திற்கு தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

அப்பன் பண்ண தப்புல - 6 Pack Kurukku Theru,இந்தியா
20 பிப், 2012 - 16:01 Report Abuse
 அப்பன் பண்ண தப்புல சுருதி இவனிடம் ஜாக்கிரதை,,,,இவன் பிழிஞ்சு எடுத்துறுவான்...
Rate this:
ஐயோபாவம் - Bangalore,இந்தியா
20 பிப், 2012 - 10:07 Report Abuse
 ஐயோபாவம் "விஷால் முதன்முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல்முறை. " அண்ணே, எந்த ஊர் தமிழ் இது?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in