கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழ், மற்றும் தெலுங்குத் திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு வரை நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. இப்போதும் ஐந்தாறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறார்.
2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அமீர் இயக்கத்தில், சூர்யா நாயகனாக நடித்து வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. 'லேசா லேசா' படத்தில் நடிக்கத்தான் த்ரிஷா முதலில் ஒப்பந்தம் ஆனார், ஆனால், முதலில் வெளிவந்தது 'மௌனம் பேசியதே' படம். 2003ல் விக்ரம் ஜோடியாக த்ரிஷா நடித்து வெளிவந்த 'சாமி' படத்தின் வெற்றி த்ரிஷாவை ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.
தொடர்ந்து 2004ம் ஆண்டு விஜய் ஜோடியாக நடித்த 'கில்லி' படமும், அதே வருடத்தில் தெலுங்கில் அவர் நாயகியாக நடித்து வெளிவந்த 'வர்ஷம்' படமும் மாபெரும் வெற்றி பெற்று த்ரிஷாவை முன்னணி ஹீரோயின் ஆக்கியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் 1 அந்தஸ்தைப் பெற்றார்.
தற்போது நம்பர் 1 இடத்தில் இல்லை என்றாலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதியுடன் '96' படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 'மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, 96' ஆகிய படங்கள் 2018ல் வெளிவர வாய்ப்புகள் அதிகம். அடுத்த வருடத்தில் அதிகப் படங்களில் நடித்தவர் என்ற பெருமையை த்ரிஷா பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.