அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளுக்காக நேற்று அவரைப் பலரும் வாழ்த்தினார்கள். ரசிகர்கள், திரையுலகத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அவரை டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலமும் வாழ்த்தினார்கள். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
“செய்தித்தாள்கள் மூலமாகவும், சுவரெட்டி விளம்பரங்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனைவருக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் நண்பர்கள், திரையுலக நண்பர்கள், விளையாட்டுத் துறை நண்பர்கள், மீடியா நண்பர்கள் என வாழ்த்திய அனைவருக்கும், என் ரசிகர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்,” என டுவிட்டர் மூலம் நன்றியைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
மேலும் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், டிவிட்டரில் அவரை வாழ்த்திய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கிரிக்கெட் வீரர்கள் அஷ்வின், சுரேஷ் ரெய்னா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாரூக்கான், மோகன்லால், மகேஷ் பாபு, மோகன் பாபு, கமல்ஹாசன், அனுபம் கேர், நிவின் பாலி, ஜெயம் ரவி, அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், அக்ஷய் குமார், மாதவன், சிவகார்த்திகேயன், ஆர்யா ஹிந்திப்பட இயக்குனர் கரண் ஜோஹர், நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு ஆகியோருக்கு டிவிட்டரில் தனித் தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.