Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தா புகைப்படம் வெளியானதற்கு படக்குழு புகார்

12 டிச, 2017 - 14:34 IST
எழுத்தின் அளவு:
Samantha-photos-leaked-:-Rangasthalam-team-file-complaint

திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. அவர் தற்போது தெலுங்கில் 'ரங்கஸ்தலம்' படத்தில் ராம்சரண் ஜோடியாக நடித்து வருகிறார். அப்படத்தில் சமந்தா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர்.

பணக்கார வீட்டுப் பெண்ணாக சமந்தா நடிப்பதாகவே படக்குழுவினர் சிலர் கேட்டதற்கு சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால், சில நாட்களாக அப்படத்தில் சமந்தா எந்த மாதிரியான கதாபாத்தில் நடிக்கிறார் என்பதைப் புரிய வைக்கும் சில புகைப்படங்கள் திடீரென 'லீக்' ஆகின. சமூக வலைத்தளங்களிலும் அது வைரலானது.

படம் வெளிவருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் சமந்தா கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்த படக்குழுவினருக்கு அந்த சஸ்பென்ஸ் இப்போதே உடைந்துவிட்டது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதனால், அந்தப் புகைப்படம் லீக் ஆனது குறித்து ஐதராபாத், சைபர்கிரைம் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து இது போன்று மேலும் புகைப்படங்களோ, அல்லது படம் சம்பந்தப்பட்டத் தகவல்களோ வெளிவந்தால் அது தங்களது படத்தைப் பெரிதும் பாதிக்கும் என அந்தப் புகாரில் கூறியுள்ளார்கள்.

இணையதளங்களில் முழு திரைப்படங்கள் வெளிவருவதையே இன்னும் தடுக்க முடியாமல் இருக்கிறார்கள். இப்போது அந்த வரிசையில் புகைப்படங்கள் கூட திருட்டுத்தனமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in