தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
மிலன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கரம் பிடித்தார். இத்தாலியில் மிலன் நகரில் திருமணம் இனிதே முடிந்தது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கடந்த 2013ம் ஆண்டு ‛ஷாம்பு விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தார். பின் காதலில் விழுந்த இருவரும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்ப இலங்கை அணிக்கு எதிரான டி-20, ஒருநாள் தொடரிலிருந்து கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தாலியிலுள்ள மிலன் நகரில் அனுஷ்கா சர்மாவை கோஹ்லி கரம் பிடித்தார். பலத்த பாதுகாப்புக்கிடையே டஸ்கனியிலுள்ள ஆடம்பர ‛ரிசார்ட் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்துக்கு முன் இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.