Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் மருதநாயகமா...? அதில் ரஜினியுமா...? கமல் தரப்பு மறுப்பு!!

18 பிப், 2012 - 14:45 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசன் தன்னுடைய கனவு படமான மருதநாயகம் படத்தை மீண்டும் கையில் எடுக்கப்போவதாகவும், அதில் முக்கிய ரோலில் ரஜினியும் நடிக்க போவதாகவும் வந்த தகவலை கமல்ஹாசன் மறுத்துள்ளார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில், 1997-ல் கமல்ஹாசன் மருதநாயகம் என்ற படத்தை இங்கிலாந்து ராணி எலிசபத்தை வைத்து பிரம்மாண்டமாக தொடங்கினார். சரித்திரத்தை பின்னணியாக கொண்டு உருவான இப்படம், பின்னர் பட்ஜெட் பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து இப்படத்தை எடுக்க கமல்ஹாசன் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் முடியவில்‌லை.

இந்நிலையில் கமல்ஹாசன் மீண்டும் “மருதநாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும், இதில் ரஜினியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனை கமல் தரப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து கமல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்‌தில் பிஸியாக இருக்கிறார். அதற்கு அடுத்து தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறார். மற்றபடி அவர் மீண்டும் மருதநாயகம் படத்தை துவங்கபோவதாகவும், அதில் ரஜினி நடிக்கப்போவதாகவும் வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

சக்தி - sivkasi,இந்தியா
22 பிப், 2012 - 14:41 Report Abuse
 சக்தி ரஜினியும், கமலும் இணைந்தால் படம் அபார வெற்றியடையும்
Rate this:
பாபு ஹமீத் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
22 பிப், 2012 - 13:31 Report Abuse
 பாபு ஹமீத் வரலாற்று சிறப்புமிக்க படம் மருதநாயகம் கண்டிப்பாக வரவேண்டும். ஒரு சாதனை நாயகனின் படமும் கூட.....அத்துடன் மருதநாயகம்....முஸ்லிம்களை சார்ந்த படமும் ௬ட.....
Rate this:
Mohamed Aboobacker - india,இந்தியா
20 பிப், 2012 - 18:52 Report Abuse
Mohamed Aboobacker வரலாற்று சிறப்புமிக்க படம் மருதநாயகம் கண்டிப்பாக வரவேண்டும். ஒரு சாதனை நாயகனின் படமும் கூட.
Rate this:
மகாராஜன் - chennai,இந்தியா
18 பிப், 2012 - 22:28 Report Abuse
 மகாராஜன் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை படித்தேன்... அவர் சுதந்திர வீரரே அல்ல.. ஆனால் அந்த வாழ்க்கை சூப்பர்... அதை அப்படியே எடுத்தால் முட்டாள் தமிழ் ரசிகர்கள் கமலை வெறுப்பார்கள்... ஆனால் நல்ல படமாக அமையும்...
Rate this:
கணேஷ் - madurai,இந்தியா
18 பிப், 2012 - 21:12 Report Abuse
 கணேஷ் இந்த சுழலில் படம் வெளி வந்தால் அவரது படங்களிலேயே சூப்பர் படமாக இருக்கும்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in