வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்த காஜல் அகர்வால், தற்போது குயின் இந்தி ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார் காஜல் அகர்வால்.
கடந்த ஆண்டு மே மாதம் டுவிட்டர் கணக்கை தொடங்கிய காஜல், தான் நடிக்கும் படங்களின் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இதனால் அவரை டுவிட்டரில் பாலோ பண்ணும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதையடுத்து அவ்வப்போது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடவும் செய்வார். இதனால் டுவிட்டரில் அவரை தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அதற்காக அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.