மக்கள் அமர சிம்மாசனம் செதுக்கிக் கொண்டிருக்கிறோம் : கமல் | சஞ்சய் தத் ரிப்பீட்டு : ரன்பீருக்கு பாராட்டு | நடிகர்கள் சம்பளத்தை குறைக்கவில்லை என்றால் ஐதராபாத்திற்கு சென்றுவிடுவேன் : ஞானவேல்ராஜா | கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு | மே மாதம் டபுள் டிரீட் தரும் சமந்தா | மீண்டும் வில்லனாக சரத்குமார் | வட அமெரிக்க தமிழ் சங்கத்தில் நடிகர்கள் கவுரவிப்பு | பேயாக நடிக்கிறார் சாந்தினி | ஹிந்தியில் பரத் அனி நேனு | ஒரே திருவிழாவில் நடக்கும் கதை - பக்கா |
தமிழ்த் திரைப்படங்களின் டீசர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும், மிகப் பெரும் சாதனையை யு-டியுபில் படைத்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 'விவேகம், மெர்சல், தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளன.
'விவேகம்' படம் உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்தது. அதற்கு முன் முதலிடத்தில் இருந்த 'ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' டீசரின் சாதனையை 'விவேகம்' முறியடித்தது. அதன்பின் வெளிவந்த 'மெர்சல்' படத்தின் டீசர், 'விவேகம்' டீசரின் லைக்குகள் சாதனையை முறியடித்து, தற்போது 10 லட்சம் லைக்குகளுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் 'விவேகம்' டீசரின் லைக்குகள் சாதனையை முறியடித்து தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சாதனையை 80 லட்சம் பார்வைகளுடன் புரிந்துள்ளது. இப்போது உலக அளவில் 'மெர்சல், தானா சேர்ந்த கூட்டம், விவேகம்' ஆகிய படங்களின் டீசர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.